Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழக்க தோஷத்தில் முதல்வர் வாகனத்தில் ஏற முயன்ற ஓபிஎஸ்: ஈபிஎஸ் அதிர்ச்சி

Advertiesment
பழக்க தோஷத்தில் முதல்வர் வாகனத்தில் ஏற முயன்ற ஓபிஎஸ்: ஈபிஎஸ் அதிர்ச்சி
, புதன், 21 பிப்ரவரி 2018 (16:17 IST)
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை இழந்து ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இன்னும் அவர் மனதில் முதல்வர் பதவி விலகவில்லை என்பது அவரது இன்றைய நிகழ்வில் தெரியவந்துள்ளது.
 
இன்று அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டன.
 
இந்த நிலையில் ஆலோசனை முடிந்து வெளியே புறப்பட்ட ஓபிஎஸ், தன்னுடைய வாகனம் என கருதி முதலமைச்சர் வாகனத்தில் ஏற முயன்றார். உடனே அங்கிருந்த அவருடைய பாதுகாவலர்கள் இது முதல்வரின் கார் என்றும் உங்கள் கார் வெறொரு இடத்தில் நிற்பதாக சொன்னவுடன் தான் ஓபிஎஸ் சுதாரித்து கொண்டார். அதன் பின்னர் தன்னுடைய கார் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்று தன்னுடைய வாகனத்தில் ஏறி புறப்பட்டார். இது தற்செயலான விஷயமாக இருந்தாலும் இதுகுறித்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் - அதிர்ச்சி வீடியோ