அவர்கள் ஆட்சி சரியில்லை என்று கூறி வருகிறேன். அதிமுகவினர் யாரையும் நான் சந்திக்க போவதில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாளை கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி, ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோரை சந்தித்து பேசினார்.
இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசனை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு கமல் மற்றும் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அதிமுக தலைவர்களை யாரேனும் சந்திப்பீர்களா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல் கூறியதாவது:-
அவர்கள் ஆட்சி சரியில்லை என்று கூறி வருகிறேன். அவர்கள் யாரையும் நான் சந்திக்க போவதில்லை என்று கூறினார்.
இதே தற்போது திமுக ஆட்சியில் இருந்தால், கமல்ஹாசன் அதிமுகவினரை சென்று சந்தித்து இருப்பாரா? என்ற கேள்வி பரலவாக எழுந்துள்ளது. மேலும் ஒருவேளை ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால் அதிமுகவினரை சந்திக்க மாட்டேன் என கூறி அவரை சந்திக்காமல் இருந்திருப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுகவில் சிறந்த அனுபவமுள்ள அரசியல்வாதிகள் சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. சீனியர்களாக ஓபிஎஸ், இபிஎஸ் இருந்தாலும் அவர்கள் ஜெயலலிதாவுக்கு இணையாக யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.