Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடியின் விருந்தில் கலந்துகொள்ளாத ஒ.பி.எஸ் மகன் ! அமைச்சர் பதவி இல்லையா ?

Advertiesment
மோடியின் விருந்தில் கலந்துகொள்ளாத ஒ.பி.எஸ் மகன் ! அமைச்சர் பதவி இல்லையா ?
, வியாழன், 30 மே 2019 (18:01 IST)
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
இந்நிலையில் இன்று மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவையில் யார்? யார் இடம் இடம்பெறுவார்கள் எனபது குறித்த அரசியல் பரபர்ப்புகள் எகிறிக்கொண்டே உள்ளது.
 
இந்நிலையின் இன்று மாலை 7 மணி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் மோடி பாரதப்பிரதமராக பதவியேற்கும் விழா சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.அப்போது அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
 
முன்னதாக தற்பொழுது புதிய அமைச்சர்களாக பதவியேற்கப்போகிற எம்.பிக்களுக்கு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தேனீர் விருந்து நடைபெற்றது. இதில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 
webdunia
ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் 1 தொகுதியில் மட்டும் (தேனி ) வெற்றிபெற்று தற்போது டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் அத்தொகுதியின் எம்.பியாகப் பொறுப்பேற்கவுள்ள ரவீந்தரநாத் குமார் மோடியில் இல்லத்தில் நடைபெற்ற இவ்விருத்தில் கலந்துகொள்ளவில்லை  குறிப்பிடத்தக்கது.
 
இதனால் அதிமுக தரப்பில் இருந்து ஒரு எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளா ரவீந்தரநாத் குமார் மத்திய அமைச்சராவர் என்று எதிர்ப்பார்த்திருந்த அதிமுக கட்சியினர் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல் தெரிகிறது. ஆனால் இன்னும் மத்திய அமைச்சர்கள் பற்றிய முறையான தகவல்கள் வெளியாகவில்லை இன்னும் சற்று நேரத்தில் அனைத்து யூகங்களுக்கும் முடிவு தெரிந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.25,400 வரை தள்ளுபடி: பிளிப்கார்ட் மன்த் எண்ட் ஆஃபர்!