Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்வெட்டு உண்மையாகிவிடும்போல் தெரிகிறதே! அமைச்சர் ஆகிறாரா ஓபிஎஸ் மகன்

Advertiesment
கல்வெட்டு உண்மையாகிவிடும்போல் தெரிகிறதே! அமைச்சர் ஆகிறாரா ஓபிஎஸ் மகன்
, திங்கள், 20 மே 2019 (21:00 IST)
சமீபத்தில் தேனி தொகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியின் எம்பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த பின்னர் ஒருவரை இந்த விஷயத்திற்காக பலிகடா ஆக்கப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவின்படி தேனி தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெறுவார் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த தொகுதியில் அமமுகவின் தங்கத்தமிழ்செல்வன் ஓரளவுக்கு வாக்குகளை பிரித்தாலும் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் களமிறக்கியது தவறு என்றும், இதனாலேயே ஓபிஎஸ் மகன் வெற்றி பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் டெல்லியில்  நாளை நடைபெறவிருக்கும் பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் கலந்து கொள்ளவிருக்கின்றார் இந்த கூட்டத்தில் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க ஓபிஎஸ் காய் நகர்த்துவார் என்றே கூறப்படுகிறது.
 
webdunia
ஆக மொத்தத்தில் தேனியில் உள்ள கோவிலில் பதிக்கப்பட்ட கல்வெட்டு பலிப்பது மட்டுமின்றி அதற்கு மேல் அமைச்சரும் ஆகிவிடுவார் ஓபிஎஸ் மகன் என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யாராய் மீம்ஸ் விவகாரம்: விவேக் ஓபராய்க்கு நோட்டீஸ்