Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்க்கட்சிகள் ஐசியு-வில் உள்ளன – மத்திய அமைச்சர் கிண்டல் !

Advertiesment
எதிர்க்கட்சிகள் ஐசியு-வில் உள்ளன – மத்திய அமைச்சர் கிண்டல் !
, திங்கள், 20 மே 2019 (15:13 IST)
தேர்தல் கருத்துக் கணிப்புகள் முடிந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஐசியு வில் உள்ளன என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 

தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாஜக வெற்றிபெரும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ‘ கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்த்துவிட்டு மம்தா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் ஐசியு-வில் உள்ளன.  மே 23 க்குப் பிறகு இவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருத்துக் கணிப்பு என்பது ராசிபலன் போன்றது – கி வீரமணி பதில் !