பாஜக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை பெற்ற ஓ பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் அவரை டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது என்பதற்காக அதிமுக அவரது பெயரிலேயே ஐந்து வேட்பாளர்களை களம் இறக்கியது
இந்த நிலையில் ஆரம்பத்தில் ஓபிஎஸ் சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் போகப்போக அவரது ஆதரவாளர்கள் சுணக்கம் காட்டியதாகவும் தற்போது அவர் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் நவாஸ் கனி தற்போதைய நிலையில் முன்னிலையில் இருப்பதாகவும் கூட்டணி பலம் மற்றும் இஸ்லாமிய ஓட்டுகள் அவருக்கு பிளஸ் ஆக உள்ளது என்று கூறப்படுகிறது
மேலும் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் பெரிய அளவில் பிரச்சாரம் இல்லை என்பதால் அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார் என்றும் ஓபிஎஸ் இரண்டாவது இடத்திற்கு வருவார் என்றும் தற்போதைய நிலவரம் கூறுகின்றன
இருப்பினும் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டால் ஓபிஎஸ் ஆச்சரியமாக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.