பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை தூக்கம் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதிகட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
	 
	இந்நிலையில்  தேர்தல் பரப்புரைக்கான இறுதி நாளில் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தீவிர பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை என்றார்.
	 
	மானமிகு சுயமரியாதைக்காரர்கள், இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கு இடையே நடக்கும் போர் என்றும் ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
	 
	I.N.D.I.A. கூட்டணி இந்த முறை மத்தியில் ஆட்சி அமைக்க போகிறது என்றும் அதற்கான ஆரம்பப் புள்ளியாக கோவை மக்களவைத் தொகுதி இருக்க போகிறது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
	 
	கலவரத்தை ஆயுதமாக பயன்படுத்தும் பாசிஸ்ட்டுகள் - அவர்களின் எடுபிடிகளை விரட்டி அடித்து, இந்திய ஒன்றியத்துக்கு விடியலை தர “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.