Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்து கடவுளை இப்படியா கொச்சைப்படுத்துவது? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

இந்து கடவுளை இப்படியா கொச்சைப்படுத்துவது? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
, புதன், 25 மே 2022 (10:43 IST)
சிதம்பரம் நடராஜர் ஆனந்த தாண்டவம் குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய யூட்யூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக இந்து கடவுள்கள் குறித்து யூட்யூப் சேனல்கள் அவதூறாக பேசுவது சர்ச்சையாகி வருகிறது. முன்னதாக முருகன் கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் முடக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தில்லை நடராஜர் ஆனந்த தாண்டவ கோலம் குறித்து யூ டூ ப்ரூட்டஸ் என்ற யூட்யூப் சேனல் சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்ட வீடியோ இந்து மத உணர்வாளர்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தில்லை நடராஜர் குறித்து அவதூறாக பேசிய யூட்யூப் சேனல் மீது அதன் உரிமையாளர் மைனர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிதம்பரத்தில் சிவனடியார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. இந்து கடவுளை இழிவுப்படுத்திய, இந்துக்களின் மனதை புண்படுத்திய யூ டூ ப்ரூட்டஸ் யூட்யூப் சேனலை உடனே தடை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவ பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை! – ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்!