வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

Mahendran
திங்கள், 27 அக்டோபர் 2025 (19:08 IST)
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை அடைந்துள்ளன.
 
சென்னையில் இன்று மாலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் அவசர ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த திருத்த நடவடிக்கையை ஒன்றிய பாஜக அரசு குறுக்கு வழியில் வாக்குகளை நீக்க பயன்படுத்துவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. பீகாரில் 65 லட்சம் பேரின் வாக்குரிமை நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் அதே அபாயம் இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளது.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக, வாக்காளர் உரிமையை பாதுகாக்க, "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பெயரில் நாளை மாமல்லபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டப் பயிற்சிக் கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
 
இதேபோல், சிறப்பு தீவிர திருத்தத்தால் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டால், நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ்.. சகதியுள்ள சாலையில் குழந்தை பெற்ற பெண்..!

அதிமுகவுடன் கூட்டணி, விஜய்யுடன் பேச்சுவார்த்தை.. ஏன் இந்த முரண்? அமித்ஷா அளித்த பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments