கூட்டணி கட்சிகளுக்கு கூட்டணியில் மட்டுமே பங்கு உண்டு என்றும் ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது என்றும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக இதுவரை கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் இதுவரை கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2006ஆம் ஆண்டு திமுக மைனாரிட்டி அரசாக இருந்த போது கூட கூட்டணி கட்சியின் உதவியால்தான் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆனாலும் கூட்டணி கட்சிக்கு எந்தவித பதவியும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற குரல் எழுந்து வருகிறது என்பதும் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த குரலை எழுப்பி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரத்தை கொடுப்போம் என்று கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சிக்கு கிட்டத்திட்ட ஒப்புக்கொண்டார் என்றே கூறப்பட்டு வருகிறது.
ஆனால் திமுக உறுதியாக கூட்டணி ஆட்சி கிடையாது என்றும் தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது, கூட்டணி கட்சிகளுக்கு கூட்டணியில் தான் இடம் உண்டு, ஆட்சியில் எப்போதும் இடம் இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.