நேற்று தஞ்சையில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த நிலையில், அவரது காதலரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக ஆட்சியில் தான் அதிக ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பேட்டியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில் தான் அதிக ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டனர் என்றும், சென்னை ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகுதான் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும், சென்னையில் பேட்டி அளித்த ஆர். எஸ். பாரதி தெரிவித்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக நடக்கும் கொலைகளை வைத்து சட்ட ஒழுங்கு சீர்கேடு என்று சொல்ல முடியாது என்றும், கடந்த 2023 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 1500 கொலைகள் நடந்துள்ளன; இது அதிமுக ஆட்சியை விட குறைவு என்று தெரிவித்தார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையை பெரிதுபடுத்திய, எதிர்க்கட்சிகளுக்கு விக்கிரவாண்டி தேர்தல் முடிவே பதில் என்றும், அந்த தேர்தலிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது என்றும் ஆர். எஸ். பாரதி தெரிவித்தார்.