Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளா? மாணவர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (13:46 IST)
சமீபத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது என்பது தெரிந்ததே. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுத்தாள்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த தேர்வுத்தாள்கள் பெற்றோரிடம் தற்போது இல்லை என்றும் எனவே பள்ளியில் இருக்கும் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது 
 
இதனால் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இல்லை என தகவல் வந்துள்ளதை அடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் 
 
மேலும் காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்த சரியான விதிமுறைகள் வெளியிடப்படாததால் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஒரு சில பள்ளிகளில் காலாண்டு அரையாண்டு தேர்வுகளை தற்போது நடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பத்திற்கு பள்ளி கல்வித்துறை ஒரு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments