தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தினால் பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல்வகை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. மேலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளி மாணவர்களை வரவழைக்க கூடாது என்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் தமிழக அரசு எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் சேகரிப்பு தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு விடைத்தாள் சேகரிப்பு மற்றும் விடைத்தாள் ஒப்படைக்கும் பணிக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைக்ககூடாது என்றும் அந்த பணிகளுக்கு மாணவர் பெற்றோர்களை பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
ஒரு சில பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு புதிய விடைத்தாள் சேகரிப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து வேலை வழங்குவதாக எழுந்த புகாரை அடுத்து அரசு தேர்வுகள் இயக்குனர் இந்த புதிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது