Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயில்வே தேர்வு… 5 தமிழர்கள் மட்டுமே பாஸ்– சர்ச்சையைக் கிளப்பிய முடிவுகள்!

ரயில்வே தேர்வு… 5 தமிழர்கள் மட்டுமே பாஸ்– சர்ச்சையைக் கிளப்பிய முடிவுகள்!
, புதன், 17 ஜூன் 2020 (08:58 IST)
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள காலியான  96 சரக்கு ரயில் கார்டு பணியிடங்களுக்கான தேர்வுகள் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றன.

அந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 3000 பேர் வரை போட்டியிட்டு தேர்வு எழுதினார். ஆனால் அதில் வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக முடிவுகள் வெளியாகி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் வட இந்தியர்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் மூலம் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் ‘தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்களின் பாதுகாவலருக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்புக்கான மற்றுமோர் ஆதாரம். இந்த ஆட்சேர்ப்பு முறைமையை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதோடு சமூக நீதியையும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைக் கேட்டுக் கொள்கிறேன்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே போல மற்றொரு அரசியல்வாதியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “சுமார் 5,000 பேர் கலந்துகொண்ட இத்தேர்வில், 96 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அதில் ஐவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 91 பேரும் வட இந்தியர்கள். தேர்வு எழுதியவர்களில் சுமார் 3,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஐவர் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தென்னக ரயில்வேயின் தமிழர் விரோத போக்கின் மற்றொரு வெளிப்பாடாக இது உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்