Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.1000 தொலைத்த மூதாட்டிக்கு ரூ.1100 கொடுத்த காவலர்

Advertiesment
ராக்கம்மாள் | முதியோர் ஓய்வூதியம் | திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் | திண்டுக்கல் | கல்நூத்தாம்பட்டி | Retirement Pension Rs1000 | retirement pension | Dindigul Nagar North Police Station | Dindigul
, சனி, 13 ஜனவரி 2018 (04:14 IST)
முதியோர் ஓய்வூதிய பணமான ரூ.1000ஐ தொலைத்துவிட்டு திக்குமுக்காடி போய் நின்றிருந்த மூதாட்டி ஒருவருக்கு காவலர் ஒருவர் ரூ.1100 கொடுத்து உதவிய சம்பவம் திண்டுக்கல் அருகே நடந்துள்ளது.

திண்டுக்கல் கல்நூத்தாம்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி ராமக்காள் ஒவ்வொரு மாதமும் முதியோர் ஓய்வூதியமாக ரூ.1000 கிடைக்கும் பணத்தை வைத்துதான் தன்னுடைய செலவுகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த மாதம் தன்னுடைய முதியோர் ஓய்வூதிய பணத்தை வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் எதிர்பாராமல் பணத்தை தொலைத்துவிட்டார். இதுகுறித்து அவர் அவர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து 4 நாட்களாகியும் பணம் கிடைக்கவில்லை

தொலைத்த பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொண்ட திண்டுக்கல் காவல் நிலைய தலைமை காவலர் வின்சென்ட் உடனே தன்னுடைய சொந்த பணத்தை ரூ.1000 அவருக்கு கொடுத்ததோடு வழிச்செலவுக்கு ரூ.100ம் கொடுத்தார். இதனால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய மூதாட்டி மகிழ்ச்சியில் அங்கிருந்து சென்றார்

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த காவல் நிலையத்தின் மற்ற காவலர்கள், வின்சென்ட்டுக்கு பாராட்டு தெரிவித்தன. சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வெளிவந்து வின்செண்ட் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்: தினகரன்