ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கள் சீனிவாசன் கூறியுள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	கடந்த 13ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். ரப்பர் குண்டுகளை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
	 
	இதைத்தொடர்ந்து நேற்று மத்திய பாதுகப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்து. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தோட்டா, கடலோரக் காவல்படையினரது இல்லை என்று தெரிவித்திருந்தார். 
	 
	இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-
	 
	ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல்படை துப்பாக்கியால் சுடவில்லை. கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது தவறானது. கடலோர காவல்படை சுடவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சரியானது என்று கூறியுள்ளார்.