Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் ஊதுகுழல் அதிமுக என்பது உண்மைதான்: ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (21:23 IST)
பாஜகவின் ஊதுகுழலாக அதிமுக செயல்படுகிறது என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் அது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'ஊதுகுழலில் 2 வகை உண்டு என்றும், ஒன்று அடுப்பில் வைத்து ஊதுவது, அதனால் நெருப்பு உண்டாகும் என்றும், மற்றொன்று கிருஷ்ணரின் கையில் உள்ள புல்லாங்குழல், அதனால் நன்மையே கிடக்கும் என்றும், நாங்கள் கிருஷ்ணர் கையில் உள்ள புல்லாங்குழல் போன்றது. நன்மையை மட்டுமே செய்வோம்' என்றும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் எந்தவித பாகுபாடின்றி மக்கள் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாகவும், ஒருசிலர் அரசியல் லாபம் கருதி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கஜா புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக 13 கடலோர மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்