தர்மபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: திடீரென மாற்றப்பட்ட விசாரணை அதிகாரி

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (20:45 IST)
தர்மபுரியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கை விசாரணை செய்து வந்த, விசாரணை அதிகாரி திடீரென மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர்  என்ற பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன்பின்னர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இதனையடுத்து கொலை வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சதிஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். முதலில் தலைமறைவான சதீஷை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் இன்று ரமேஷும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த கோட்டப்பட்டி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி என்பவர் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்