Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வில் மீண்டும் சசிகலா… ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் யாருக்கு ? – ஓ பி எஸ் பதில் !

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (16:38 IST)
அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

மருது சகோதரர்களின் 218ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இருவரின் சிலைகளுக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு ‘தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் இசைவைப் பெற்றுதான் அந்த குடும்பத்தைக் கட்சியை விட்டு நீக்கினோம். அவர்களை அதிமுகவில் இணைக்கச்சொல்லி கேள்வி எதுவும் எழவில்லை. அப்படி எழுமாயின் அதைத் தீர்மானிக்கக் கூடிய மிகப்பெரிய சக்தியாக பொதுக்குழுதான் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments