திமுகவின் பேட்டி தான் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தனக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் பிடிஆர் ஆடியோவை ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் யாரை வேண்டுமானாலும் மீண்டும் சேர்க்க தயாராக உள்ளோம் ஆனால் ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க தயாராக இல்லை என்றும் அவர் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்றும் தெரிவித்தார்.
பொதுக்குழு அவரை அங்கீகரித்து விட்டால் அது சிறந்த பொதுக்குழு என்று கூறுவார் அங்கீகரிக்கவில்லை என்றால் சரியில்லை என்று கூறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.