கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது அதன் பிறகு இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் என்பவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக IPC 1860 உட்பிரிவு 171G-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாக, தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது