2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 13 தொகுதிகளை பாஜக கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 13 தொகுதிகள் வேண்டும் என அமித்ஷா கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கு தொகுதியை பாஜக கேட்டு பெற்றுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு மூன்று சதவீத வாக்குகள் மட்டுமே இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் 13 தொகுதிகளை அதிமுக கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.