Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு இல்லனாலும் கட்சிக்கு விஸ்வாசமா இருங்க: ஓபிஎஸ் பேச்சு!!

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (14:43 IST)
தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விஸ்வாசமாக இருக்க வேண்டும் என ஓபிஎஸ் பேச்சு. 
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியது. 
 
இதன் பின்னர் அமைச்சர்களுடன் தனித்தனியே அலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பின்னர் கூட்டாக இனி இது போன்று கட்சி குறித்தும் ஆட்சி குறித்தும் தன்னிச்சையான கருத்துக்களை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
 
இந்நிலையில் தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பின்வருமாறு பேசினார், தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விஸ்வாசமாக இருக்க வேண்டும். எனக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதே இல்லை. 
 
2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக அமையும் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

அடுத்த கட்டுரையில்
Show comments