விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியில், ஏற்கனவே அனுபவம் வாய்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் இணைந்த நிலையில், மேலும் சில அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. பிரபலங்கள் இணைவார்கள் என்று கூறப்பட்டது.
அந்த வகையில், தற்போது ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் வைத்திலிங்கம் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களின் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் தற்போது அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கும் வைத்திலிங்கம் தவெகவில் இணைந்தால் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் வைத்திலிங்கம் தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என்று தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல பிரபலங்கள் விஜய் கட்சியில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.