வீரமணியில் இருந்து பார்த்து விட்டோம் ? பகுத்தறிவு என்பது எங்களுக்கு பக்கமில்லை எல்லோரும் பணத்திற்கு பின் இருக்கின்றார்கள்
பெரியாரின் கொள்கைகள் தற்போதைய திக தலைவர் வீரமணியிடம், பெரியாரின் கோவணத்துணியின் நூல் அளவு கூட இல்லை ஆனால் விட்டு சென்ற சொத்துக்கள் மட்டும் வேண்டுமா ? கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அதிரடி பேட்டி
நாசிக் நகரில் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதில் கூட இந்த அளவிற்கு வருமானம் இருக்காது ? டாஸ்மாக் கடைகளின் மூலம் அவ்வளவு வருமானம் அப்புறம் எப்படி டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுவார்கள் ? கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அதிரடி பேட்டி
கரூரில் சுதந்திர போராட்ட வீரர் முத்துசாமி மற்றும் அவரது துணைவியார் காளியம்மாள் ஆகியோரது கனகாபிஷேக நிகழ்ச்சி பிரேம் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையடுத்தும்,, சுதந்திர போராட்ட வீரரும், க.க.முத்துசாமி அவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும் விடுதலைக்கு வித்திட்ட வீரர் என்கின்ற நூல் வெளியீட்டு விழா வெளியிடப்பட்டது. தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு இன்றுவரை மதுவிலக்கு குறித்து பேச எங்களை அழைத்து பேசவில்லை, மேலும், தற்போது அமைச்சர் பெருமக்கள் எல்லாம், சாராயம் காய்ச்சுபவர்களாக தான் இருக்கின்றார்கள். ஏனென்றால் அதனால் தான் தொடருது கள்ளுக்கு தடை என்று கூறிய அவர், சாராயத்தின் மூலம் எந்த அளவிற்கு லாபம் வருகின்றது என்று கூறினால், இந்த தொழிலுக்கு மூலப்பொருளான மொலாசஸ் என்கின்ற பொருளை கரும்பின் மூலம் கொடுத்தவர் அரச்சலூர் மகாலிங்கம் என்பவர், அவர் மறைவிற்கு முன்னர் அவரது பத்திரிக்கையில் கூறியிருந்தார். அதில், காலிபாட்டில் விலை 3 ரூபாய், உள்ளே இருக்கும் மதுபானத்தின் விலை ரூ 9 ரூபாய், ஆக அடக்கவிலை ரூ 12 மட்டும், ஆனால் டாஸ்மாக்கில் விற்பது ரூ 380 என்று பதிவிட்டிருந்தார். ஆக, நாசிக் நகரில் நோட்டு அச்சடிப்பதில் கூட அவ்வளவு லாபம் இல்லை, அந்த அளவிற்கு லாபம், தமிழக டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக அரசிற்கு என்றும், அதனால் தான், வலதுசாரி, இடதுசாரி, மாநில கட்சி, தேசிய கட்சி ஆகியவைகள் எல்லாரும், தேர்தல் நேரத்தில் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விடுகின்றார்கள் என்றார். மேலும், சசிக்குமார் மறைவின் போது, மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ, கள் இயக்கத்தினை சார்ந்தவர்கள் வந்துள்ளார்கள் என்று கூறி எஸ்கேப் ஆனார். அதே போல், பாமக ராமதாசு, அன்புமணி ராமதாசு ஆகியோரும் அப்படி தான், கள் ஒரு போதைப்பொருள் என்று வாதிட மாட்டார்கள்., ஏனென்றால் அவர்களுக்கு தெரியும், அதே போல தான், பெரியார் கள் ஆதரவாளர், அவருடைய கட்சியை நிர்வகிப்பவர் வீரமணி, ஆனால் கள்ளுக்கு ஆதரவாக எந்த ஒரு கூட்டத்திற்கும் வந்ததில்லை, கூட்டத்தின் ஒரத்தில் கூட நிற்பதில்லை, ஆகவே பகுத்தறிவு என்பது எங்களுக்கு பக்கமில்லை எல்லோரும் பணத்திற்கு பின்னர் தான் உள்ளார்கள் என்றும், பெரியாரின் கொள்கைகள் கோவணத்துணியின் நூல் அளவு கூட இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற சொத்து தான் பெரிது என்று வீரமணி உள்ளார் என்றும் கூறினார்.