Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள எல்லையில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை: அமைச்சர் சுப்பிரமணியன்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (12:00 IST)
கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பொது மக்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது என தகவல். 

 
மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது.  
 
அப்பகுதியைச் சேர்ந்த பெண் உள்பட 18 பேருக்கு ஏற்கெனவே இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒன்றரை வயது குழந்தை உள்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கேரள எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை. 
 
கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பொது மக்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு மாதங்களில் 33 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளோம் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments