மகாராஷ்ட்ரா, கேரளா ஆகிய 2 மாநிலங்களில் இந்தியாவின் 50 சதவீத கொரோனா பாதிப்பு உள்ளது என தகவல்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,07,52,645 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய இரு மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.