கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் குறைந்து கொண்டே வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டன என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து இன்றும் நாளையும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இன்றும் நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாகவும் முழு ஊரடங்கை அடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது
மேலும் மது கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இன்றும் நாளையும் இயங்காது என்று அறிவித்துள்ள கேரள அரசு, ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதி என்றும், மருத்துவம், சுகாதாரம், பத்திரிகை வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி என்றும் தெரிவித்துள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது