ஓபிஎஸ் யாரை மனதில் வைத்து பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் பாஜகவை விமர்சிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழிசை சௌவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய கட்சிகள் எந்த காலத்திலும், எந்த நிலையிலும் காலூன்ற முடியாது. அதுதான் தமிழக மக்களின் தீர்ப்பு என துணை முதல்வர் ஓபிஎஸ் நேற்று கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகம் பாஜகவின் பிடியில் இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு கூறியது பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
தேசிய காட்சிகள் காலூன்ற முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாரை மனதில் வைத்து பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் பாஜகவை அவர் விமர்சித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை மனதில் வைத்து கூட பேசி இருக்கலாம்.
ஆனால் தொடர்ந்து எல்லோரும் பாஜக காலூன்ற முடியாது என்ற கருத்தை கூறி வருகிறார்கள். காலூன்ற முடியாத கட்சியை பற்றி அவர்கள் ஏன் பேச வேண்டும். மற்ற கட்சிகள்தான் கூட்டணியை தேடிக் கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.