Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது: முன்னாள் முதல்வர் குமாரசாமி..!

Advertiesment
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது: முன்னாள் முதல்வர் குமாரசாமி..!
, புதன், 13 செப்டம்பர் 2023 (14:20 IST)
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமி ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
தமிழ்நாட்டிற்கு தினமும் 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசு தண்ணீரை திறக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் விவசாயிகள் மீதும், பெங்களூரு மக்கள் மீதும் அக்கறை இருந்தால் அரசு தண்ணீரை திறந்து விட்டிருக்காது என்றும்,  பெங்களூரு மக்களின் மௌனம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும்,  அண்டை மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து நம்முடைய நிலம், நீர், பொருளாதாரத்தை பயன்படுத்தி வசதியாக இருப்பவர்கள் கூட காவிரிக்காக குரல் எழுப்பவில்லை என்றும் அவர் கூறினார்.
 
மேலும்  இவர்களில் யாருக்கும் காவிரி நீர் பற்றி கவலையில்லை என்றும் குமாரசாமி ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்: தீர்ப்பு எப்போது?