பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் மக்களை இன்று தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க உள்ளார்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் இடம் தர மறுத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை நேரில் சந்தித்து அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிய உள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தார். அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் வைத்து மக்களை சந்திக்க முடிவு செய்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர்.
ஆனால் அம்பேத்கர் திடலில் கூட்டம் நடத்த அனுமதியில்லை என போலீஸார் தவெகவினர் அமைத்த பந்தல்களை அகற்றக் கோரியதால் நேற்று இரவில் போலீஸார், தவெகவினர் இடையே வாக்குவாதம் உண்டானது. அதை தொடர்ந்து தவெகவினர், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.
இடம் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சந்திப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணியில் இருந்து 1 மணி வரை பரந்தூர் போராட்டக்குழுவினரை விஜய் சந்திக்கிறார். இதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு வாகனங்களில் மட்டுமே மக்கள் வர வேண்டும், அதிக கூட்டம் கூடாமல் குறிப்பிட்ட அளவில் மட்டுமே மக்கள் வர வேண்டும் என காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Edit by Prasanth.K