அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் 10 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
இதில் 26 கல்லூரிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் 10 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.