தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் என் மண் என் மக்கள்' பாதயாத்திரை, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், என் மண் என் மக்கள் யாத்திரையின் ஊடக பிரிவு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இன்று பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை EX-IPS அவர்களின் என் மண் என் மக்கள்' பாதயாத்திரையானது, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இதனை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்பது தாங்கள் அறிந்ததே !
இந்திய நாட்டை வளமான வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மீண்டும் 2024ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவும், தமிழகமெங்கும் தாமரை மலரவும், தூய அரசியலை முன்னெடுக்கவும் இந்த யாத்திரையை எங்கள் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொள்கிறார்!
இந்த பாதயாத்திரையின் ஊடக ஒருங்கிணைப்பாளரான திரு.ரெங்கநாயகலு, (தலைவர்,தமிழக பாஜக மாநில ஊடகப் பிரிவு) அவர்களுடன் இணைந்து,திரு.ராஜவேல் நாகராஜன் (நிறுவனர், பேசு தமிழா பேசு) அவர்கள் ஊடக இணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்!
வாருங்கள், கை கோர்ப்போம், லஞ்சம் ஊழல் இல்லா தமிழகம் படைப்போம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.