காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் எங்களது தேவைக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பில் கன மழை பெய்து வருவதை அடுத்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை அடுத்து வேறு வழியின்றி கர்நாடக அரசு தற்போது தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து உள்ளது.
கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு 12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் கபினி மற்றும் கேஆர்எஸ் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், வருண பகவானின் மகிமையால் நீர்வரத்து அதிகமாகி உள்ளதை அடுத்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது