இனிமேல் டெலிவரியில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை - ஃப்ளிப்கார்டு

சனி, 31 ஆகஸ்ட் 2019 (20:22 IST)
ஆன்லைன் வர்த்தக தளத்தில் மிகவும் புகழ்பெற்றது ஃப்ளிப்கார்டு நிறுவனம். பல்வேறு போட்டிகள் மத்தியில் தனித்தன்மையுடம் தனது வாடிகையாளர் சேவையை செய்து வருகிறது. அவ்வப்போது பல அதிரடி ஆஃபர்களையும் அறிவித்து தனது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும்.
இந்நிலையில் பொரும்பாலான மாநிலங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடைவிதித்துவருகின்றனர். நம் தமிழ்நாட்டில் அது இவ்வாண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது. உ.,பியில் முதல்வர் ஆதித்யநாத் இனிமேல் பிளாஸ்டிக் பயன்பாடுக்கு தடைவிதிப்பதாகவு கூறியுள்ளார். இந்நிலையில் ஆன்லைன் வர்த்தக் நிறுவனம் ஃபிளிப்கார்டு, ஒற்றைப் பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தங்கள் டெலிவரி செய்யும் போது பயன்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது.
 
மேலும் 2021 ஆம் ஆண்டுக்குள்ளாக தாங்கள்  பயன்படுத்தும் பொருட்கள் மறுசுழற்சி செய்யும் வகையில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. எனவே இந்நிறுவனத்தின் டெலிவரியின் போது, பாலிகவர்,பாலிபேக், பபுள் ரேப் ஆகியவற்றிக்கு பதிலாக பேப்பர் அட்டை மாதிரி சில மாற்றங்களை கொண்டுவர உள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காவிரி நதியை மீட்க மோட்டார் சைக்கிள் பயணம் - மக்களைச் சந்திக்கிறார் ஜக்கி வாசுதேவ் ...