காவிரி நதியை மீட்க மோட்டார் சைக்கிள் பயணம் - மக்களைச் சந்திக்கிறார் ஜக்கி வாசுதேவ் ...

சனி, 31 ஆகஸ்ட் 2019 (19:56 IST)
காவிரி நதியை மீட்க வேண்டும் என்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை தலைகாரிவியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் பயணம் மேற்கொள்ள உள்ளா ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.
இதுகுறித்து இன்று சென்னையில், தமிழ்மாறன் ( ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளார் ) கூறியதாவது :
 
ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ் நதிகளை மீட்போம் , காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் தென்னிந்தியாவில் உயிர்நாடியாக உள்ள காவிரியை மீட்கவும்,  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் இருக்கும். இந்நிலையில் தமிழக கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்புடன் காவிரி நதியை மீட்க வேண்டி, சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரில் தொடங்கி தன்  திருவாரூர் வரைக்குமார் சுமார் 1200 கி.மீ பயணத்தை மோட்டார் சைக்கிளில் சென்று மக்களை சந்திக்க இருக்குறார். இப்பயணமானது செப்டம்பர் 3 ஆம் தேதிமுதல் 15 ஆம் தேதிவரையிலும் நடைபெறும் என்று தெரிவித்தார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் படித்துக்கொண்டே இருக்கும் கணவர்.. என் மீது அக்கறை இல்லை .. விவாகரத்து கேட்கும் மனைவி !