நம்ம ஊர் செல்ஃபி விரும்பிகளுக்காக ஓப்போ, விவோ செல்போன் நிறுவனங்கள் ஏகப்பட்ட மாடல்களை களம் இறக்கியுள்ளனர். அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடு அளவுக்கு அட்டகாசமான தொழில்நுட்பத்துடன் களம் இறங்க இருக்கிறது நோக்கியாவின் புதிய மாடலான நோக்கியா 9 பியூர் வியூ.
இந்த புதிய மாடலின் முக்கிய சிறப்பம்சமே இதில் உள்ள கேமராக்கள்தான். பின்பக்கம் மட்டும் மொத்தம் 5 கேமராக்கள். ஒவ்வொன்றும் 16 பிக்சல் ஒளிநுட்பம் கொண்டவை. மேலும் பின்பக்கம் உள்ள சென்சார், ஒளியின் அளவை கணக்கிட்டு அதற்கேற்ப ஒளியை அதிகரித்து கொள்ளும். இதனால் சாதாரண போன்களில் லைட் குறைவான இடத்தில் போட்டோ எடுக்கும்போது இருக்கும் தரத்தை விட பிரமாதமான போட்டோவை இதை வைத்து எடுக்க முடியும். மேலும் பின்பக்கம் 5 கேமராக்கள் இருப்பதால் அதிக மெகாபிக்சலில் தரமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.
முன்பக்க கேமரா 20 MP தரம் கொண்டது. துல்லியமான செல்பிகளை நல்ல கலரில் எடுக்க இது அற்புதமாக இருக்கும்.
5.99 இன்ச் முழு டிஸ்ப்ளே அமைப்பை கொண்ட இந்த மொபைல் குவாட் ஹெச்டி+ தரத்தில் வீடியோக்களை காட்டும். 1440x2960 பிக்சல்ஸ் அளவு கொண்ட வீடியோ திரை, 6 ஜிபி RAM, ஸ்னாப்ட்ராகன் குவால்காம் ப்ராஸசர் கொண்டுள்ளது. ஒரு நேரத்தில் பல அப்ளிகேசன்களை உபயோகித்தாலும் ஹேங்க் ஆகாது. 128 ஜிபி போன் மெமரி. 3350 mAh பேட்டரி பவர் கொண்டுள்ளது.
வாட்டர் ரெசிஸ்டண்ட் திறன் கொண்டது. ஜூலை 17ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த மொபைலின் விலை 49,999 ரூபாய். இது ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் விற்பனை தளங்கள், முகவர்கள் மூலம் விற்பனைக்கு வருகிறது. இப்போதே நோக்கியாவின் அதிகாரபூர்வ வலைதளத்தில் ஆர்டர் செய்தால் 5000 ரூபாய் கேஷ்பேக் உடன் நோக்கியா 705 ஹெட்செட் இலவசமாக கிடைக்கும்.
சில கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் கேஷ்பேக் ஆஃபர்களும் இருக்கின்றன.