ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்திப்பு நடக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்த தென்னரசு வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதும் அவரது தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ஓபிஎஸ் ஈபிஎஸ் சந்திப்பு நடைபெறும் என்றும் அதிமுக ஒரே அணியாக மாறும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது ஓபிஎஸ் ஈபிஎஸ் சந்திப்பு நடக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்றும் ஓபிஎஸ் இரட்டை இலையை முடக்க ஓபிஎஸ் முயற்சி செய்தார், ஆனால் அது முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
குப்புர விழுதாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர் என்றும் திமுகவின் பி டீம் ஆக இருந்து வரும் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சித்தார் என்றும் ஆனால் அதை நாங்கள் முறியடித்து உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.