Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அநியாயம் பண்றீங்கயா.. பெருமாள் கெட்டப்பில் காட்சி தரும் நித்யானந்தா! - வைரலாகும் புகைப்படம்!

Advertiesment
Nithyananda

Prasanth Karthick

, வியாழன், 10 அக்டோபர் 2024 (10:21 IST)

இந்தியாவிலிருந்து தப்பி சென்ற சாமியார் நித்யானந்தா, வெங்கடாஜலபதி பெருமாள் தோற்றத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 

இந்தியாவில் பிரபலமான ஆன்மீக சாமியாராக இருந்தவர் நித்யானந்தா. இவர் நாடு முழுவதும் பல பகுதிகளில் நித்யானந்தா தியானபீடம் நடத்தி வந்த நிலையில், இளம்பெண்களை கடத்தி சென்றதாக பெற்றோர்கள் அளித்த புகாரில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இந்தியாவிலிருந்து தப்பி சென்ற அவர் ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாசா என பெயர் வைத்து நடத்தி வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் அவ்வபோது வீடியோ வழியாக தன் பக்தர்களுடன் நித்யானந்தா பேசி வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தன்னை கடவுளாகவே பாவித்துக் கொள்ளும் நித்யானந்தா தற்போது மேலும் ஒரு படி சென்று தன்னை பெருமாளாகவே அலங்கரித்துக் கொண்டுள்ளார்.
 

 

திருப்பதி ஏழுமலையான் போல தன்னை அலங்கரித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது பக்தர்களை பரவசத்திற்கு உள்ளாக்கினாலும், பெருமாள் பக்தர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. ஏற்கனவே திருப்பதி லட்டால் சர்ச்சை நிலவி வரும் நிலையில் நித்யானந்தாவின் பெருமாள் கெட்டப்பை பலரும் கண்டித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறந்த மனிதனாக வாழ ரத்தன் டாடாவின் ஊக்கமளிக்கும் 10 பொன்மொழிகள்!