Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமாவளவன் சொல்லித்தான் விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார்- எச் ராஜா பேச்சு......

Advertiesment
Thirumavalavan

J.Durai

, வியாழன், 10 அக்டோபர் 2024 (08:19 IST)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா தலைமையில் நடைபெற்றது. 
 
கூட்டத்தில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத்ரெட்டி, மத்திய அரசு வழக்கறிஞர் கே ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா......
 
வாக்கு சதவிகிதத்தில் ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் உள்ளது என்றும், 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வியக்கதகு வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். 
 
திமுக அரசு கையாலாகாத வக்கற்ற அரசு என்று கடுமையாக விமர்சனம் செய்த அவர், விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்து 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதற்கும் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததுதான் காரணம். 
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக விடம் அதிக சீட்டு பெறுவதற்காக மிரட்டல் அரசியலில் ஈடுபடுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைவர் தொல் திருமாவளவன் சொல்லித்தான் பேசுவார் தானாக பேசுவதில்லை என்று தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு..!