Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நித்தியானந்தா நாட்டில் இந்தி கிடையாதாம்!; ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

நித்தியானந்தா நாட்டில் இந்தி கிடையாதாம்!; ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
, புதன், 4 டிசம்பர் 2019 (20:18 IST)
நித்தியானந்தா உருவாக்கி வருவதாக கூறப்படும் நாட்டில் இந்தி இல்லை என்று இணையவாசிகள் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.

பலமுறை சர்ச்சைகளிலும், வழக்குகளிலும் சிக்கிய நித்தியானந்தா தனக்கென தனி தீவை உருவாக்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஈகுவடார் அருகே உள்ள தீவை நித்தியானந்தா விலைக்கு வாங்கியிருப்பதாகவும், பாஸ்போர்ட், நாட்டுக்கென தனிக்கொடி என சகலத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு நாடாக அங்கீகரிக்க ஐ.நாவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
webdunia

கைலாஷ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நாட்டிற்கென தனியாக வலைதளமும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வலைதளம்தான் தற்போது இணையவாசிகள் இடையே ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் கலாஷ் புதிய நாடு பற்றி பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொழியாக ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

அதை குறிப்பிட்டு பேசிய சிலர் நித்தியானந்தா கூட இந்தியை ஏற்றுக்கொள்ளவில்லையோ என காமெடியாக கருத்துகளை கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018ல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - இந்தியா 5-வது இடம்!