Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைசா செலவில்லாம கைலாசா விசிட்: நித்தி கொடுத்த ஆப்பு +ஆஃபர் !

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (12:02 IST)
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்யானந்தா  கைலாசா பயணம் தொடர்பாக புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி கைலாசா ரிசர்வ் பேங்க், கைலாசா கரன்சிகள், கைலாசா தங்க நாணயம் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். இதன் பின்னர் சில காலம் அமைதியாக இருந்த அவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
அதில், கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படுகிறது. எப்படியாவது ஆஸ்திரேலியா வந்து விட்டால் அங்கிருந்து பைசா செலவில்லாமல்  கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு சென்றுவிடலாமாம். 
 
மேலும் கைலாசாவில் உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். அதோடு ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது எனவும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments