Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீரா மிதுன் விரைவில் கைது? கேரள போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

மீரா மிதுன் விரைவில் கைது? கேரள போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (09:33 IST)
அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர். இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அவரால் பாதிக்கப்பட்ட சிலர் குற்றவாளியை ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதித்தீர்கள் என எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து சேரன் மீது அபாண்ட பழி சுமத்தி மீரா மிதுன் பிக்பாசில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசி தனக்கு தானே பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார்.

அண்மையில் விஜய் , சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு திட்டி தீர்த்தனர். ஆனாலும், அடங்காமல் தொடர்ந்து எதையாவது செய்து பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார். அந்தவகையில் அண்மையில் மலையாளிகளை குறித்து கொச்சையாக பேசி வீடியோ வெளியிட்டதாக கேரள போலீசார் தொடப்புழாவில்  FIR பதிவு செய்து ஜாமினில் வரமுடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் பிக்சர்ஸ் செய்தது நியாயமா?... தனுஷுக்கு எல்லாம் அவ்வளவா? அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்!