Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ரவுன், ப்ளூ, பர்பிள், வெல்வெட்... கலர் கலராய் கலக்குது வாட்ஸ் ஆப்!!

Advertiesment
ப்ரவுன், ப்ளூ, பர்பிள், வெல்வெட்... கலர் கலராய் கலக்குது வாட்ஸ் ஆப்!!
, சனி, 8 பிப்ரவரி 2020 (17:39 IST)
புதிய நிறங்களில் வால் பேப்பரை மாற்றிக்கொள்ளும் வசதியை வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்கிறது பேஸ்புக் நிறுவனம்.
 
வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. வாட்ஸ் ஆப் டார்க் மோடை தொடர்ந்து 6 புதிய நிறங்களில் வால் பேப்பரை மாற்றும் அப்டேட் ஒன்றை வாட்ஸ் ஆப் செயலில் பேஸ்புக் கொண்டுவரவுள்ளது. 
 
வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷன் 2.20.31 விரைவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்பட உள்ளது. இதில் இந்த அப்டேட் இருக்கும். கறுப்பு, அடர் ப்ரவுன், அடர் நீலம், ஆலிவ் நிறம், அடர் பர்பிள் மற்றும் அடர் வெல்வெட் என 6 புதிய நிறங்கள் வழங்கப்படுகிறது. 
 
இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர வாட்ஸ் ஆப் சென்று, அதன் பின்னர் Settings - Chats option - Wallpaper - Solid Colour என கிளிக் செய்து பிடித்த நிறத்தை வைத்துக்கொள்ளலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

82 அடி உயரத்தில்...பீப்பாயில் தங்கியிருந்த நபர்! கின்னஸ் சாதனை !