Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிசிஐடி சோதனையில் நிர்மலாதேவியின் வீட்டிலிருந்த ரகசிய டைரி சிக்கியது

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (14:19 IST)
பேராசிரியை நிர்மலா தேவியின் விருதுநகர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு  சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் 3 வது நாளாக சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.   
 
இந்நிலையில் நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 6 மணி நேரம் நடத்திய சோதனையில் கம்ப்யூட்டர், பென்டிரைவ் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளது. மேலும் அவரது காரில் ரகசிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் நிர்மலாதேவியின் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சோதனைக்கு பின்னர் நிர்மலா தேவியின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments