Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவில் இருந்து திடீரென விலகிய நிர்மல்குமார்.. அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு..!

nirmalkumar
, ஞாயிறு, 5 மார்ச் 2023 (15:02 IST)
பாஜகவில் இருந்து திடீரென விலகிய நிர்மல்குமார்.. அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு..!
தமிழக பாஜகவில் இருந்து அக்கட்சியின் ஐடி பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் ராஜினாமா செய்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் தனது ராஜினாமாவிற்கு பின்னர் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். இதுகுறித்து அபாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்.
 
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது சொந்த கட்சி பிரவாகிகளையும் கொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்று அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பியிருக்கும் தொண்டர்கள் கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப தடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.
 
தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரை போல செயல்படும் நபரால் சுட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வோரு நாளும் பார்க்க முடிகிறது. 2019ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20 சதவீதம் கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒருநபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாசு நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணி முடியும்?” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
”மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?  இவ்வாறு நிர்மல் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், பாஜகவில் இருந்து விலகிய நிர்மல்குமார் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்பாப்பே அடித்த சாதனை கோல்: ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு