புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வட மாநிலத்தவர் மீது வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முதல்வர் முடிவு கட்ட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் மாண்பை காப்பார் என நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
திமுக ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு என்னும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரச்சாரம் தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது என்றும் இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வடமாநில மக்களை ஏளனமாக பேசுவதும் அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான திமுக கலாச்சாரத்தின் விளைவு தான் என்ற நிலைக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்