Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டாக சேர்ந்து விதவைப் பெண்ணை வல்லுறவு… பின்னர் கூட்டாளியைக் கொலை – அதிரவைத்த நெய்வேலி கும்பல் !

Advertiesment
கூட்டாக சேர்ந்து விதவைப் பெண்ணை வல்லுறவு… பின்னர் கூட்டாளியைக் கொலை – அதிரவைத்த நெய்வேலி கும்பல் !
, வியாழன், 28 நவம்பர் 2019 (08:51 IST)
நெய்வேலி அருகே பெண் ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் பின்னர் ஏற்பட்ட தகராறில் தங்கள் கூட்டாளியையும் கொலை செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலிப் பகுதியைச் சேர்ந்தவர் மாயாவதி என்ற பெண். கணவரை இழந்த இவர் தனது நண்பர் சுரேந்தர் என்பவரோடு இரு சக்கர வாகனத்தில் நெய்வேலிப் பகுதியில் சென்றுள்ளார். அப்போது அவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி சுரேந்தரை அங்கிருந்து துரத்திவிட்டனர். பின்னர் மாயாவதியை அங்குள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றனர்.

அங்கு வைத்து 5 பேரும் மாயாவதியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். அப்போது மயக்கமான அவரை ஏரிப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கும் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் மாயாவதியை ஊரில் கொண்டு விடுவது தொடர்பாக நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பிரகாஷ் என்பவரை மற்ற நால்வரும் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் 4 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதற்கிடையில் மாயாவதி  நெய்வேலி தெர்மல் போலீசில் இதுபற்றி புகார் செய்ய போலிஸார் விசாரணையில் கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, சிவபாலன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரகாஷைக் கொலை செய்ததை ஒத்துக் கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இரண்டாவது மனைவியை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கணவன் !