தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்
இது குறித்து சட்டமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு இயல் இசை கவின் கலை பல்கலைக்கழகம் தவிர அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பிற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேந்தராக ஆளுநர் இருந்து வரும் நிலையில் புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்