Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவின் நிழல்… நம்மூர் ரசிகர்களும் ரசித்தால் KGF தான்… பார்த்திபனின் நம்பிக்கைப் பதிவு!

Advertiesment
இரவின் நிழல்…  நம்மூர் ரசிகர்களும் ரசித்தால் KGF தான்… பார்த்திபனின் நம்பிக்கைப் பதிவு!
, புதன், 27 ஏப்ரல் 2022 (09:27 IST)
பார்த்திபன் இயக்கி நடிக்கும் இரவின் நிழல் திரைப்படத்துக்கு இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை தற்போது பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு திரையிட்டு காட்டியுள்ளார் பார்த்திபன். இதுபற்றிய அவரின் சமூகவலைதளப் பதிவில் “Anurag Kashyap  இந்தப் பெயர் … இந்தி’ய அளவிலிருந்து உலக அரங்கிற்குள் ஊடுருவி பிரசித்திப் பெற்றது.
இரவின் நிழல்’ கண்டபின் இருக்கையிலிருந்து எழாமல் மொபைலில் உலகத் திரைப்பட விழாக்களுக்கு ‘ கண்டதில்லை இதற்கு முன் இப்படி ஒரு பட’மென மெயில் அனுப்பினார். “Amazing”என்றபடி எழுந்தார். வீடியோ துணுக்கு கேட்டதற்கு  “ படத்திலிருந்து விடுபட நீண்ட நேரம் பிடிக்கும் ‘தங்களின் முந்தய படங்களை அவசியம் பார்க்க வேண்டும் அனுப்புங்கள் எனக்கு” என்றபடி நகர்ந்தார்.  பெருமிதம் மிதந்ததென் கண்களில். நம்மூர் ரசிகர்களும் இப்படியே ரசித்தால்? K  G F” எனக் கூறியுள்ளார். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி & அட்டகாசமான புகைப்படம்!